Monday, October 7, 2024

ஆந்திரா: லாரி, பஸ் மோதி கோர விபத்து – 8 பேர் பலி

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

அமராவதி,

ஆந்திர மாநிலம் பலமனேரு நகரில் இருந்து சித்தூர் நோக்கி இன்று மாலை அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

நெடுஞ்சாலையில் மொலிகி கட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 8 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024