Home முக்கிய செய்திகள் தமிழில் ஆனந்த் அம்பானியின் திருமண விழா… கவனம் பெறும் ஃபேம்லி போட்டோஸ்

ஆனந்த் அம்பானியின் திருமண விழா… கவனம் பெறும் ஃபேம்லி போட்டோஸ்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

நெருங்கும் ஆனந்த் அம்பானியின் திருமண விழா… கவனம் பெறும் ஃபேம்லி போட்டோஸ்நெருங்கும் ஆனந்த் அம்பானியின் திருமண விழா... கவனம் பெறும் ஃபேம்லி போட்டோஸ்

ரிலையன்ஸ் குழும தலைவர் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்டின் திருமண நாள் நெருங்கி வரும் நிலையில், அவரது வருங்கால மாமியார் ஷைலா வீரேன் மெர்ச்சென்டின் புகைப்படங்கள் கவனம் பெற்றுள்ளன.

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மும்பையில் தொடங்கின. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

விளம்பரம்

இதையொட்டி கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருமண கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் உள்ளூர் முதல் சர்வதேச பிரபலங்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமணம் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதில் இரு வீட்டாரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்டின் திருமணத்தையொட்டி மணமகளான ராதிகா மெர்ச்சென்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து நெட்டிசன்கள் அறிவதற்கு ஆர்வமாக உள்ளனர். இது தொடர்பான தேடல்கள் கூகுளில் அதிகம் செய்யப்பட்டுள்ளன.

விளம்பரம்

குறிப்பாக ஆனந்த் அம்பானியின் வருங்கால மாமியார் ஷைலா மெர்ச்சென்டின் புகைப்படத்தை இணையத்தில் அதிகம் பார்த்திருக்க முடியாது. இந்நிலையில், நீடா அம்பானி – ஷைலா மெர்ச்சென்டின் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

இதையும் படிங்க – தோனி முதல் சல்மான் கான் வரை.. ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் ‘சங்கீத்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த வெள்ளியன்று சங்கீத் கொண்டாட்டங்கள் களைகட்டின. இதில் பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், ஆலியா பட், ரன்பீர் கபூர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்விளம்பரம்

அனன்யா பாண்டே, நேஹா சர்மா உள்ளிட்ட இளம் நடிகைகளும் சங்கீத் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நடிகை ஜெனிலியா தனது கணவர் ரித்திஷ் தேஷ்முக்குடன் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த உடையுடன் பங்கேற்றார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
Nita Ambani

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024