75
ஆப்கானிஸ்தானில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
காபுல்,
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் பசோல் பகுதியில் இன்று காலை படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அந்த படகில் மொத்தம் 26 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுவரை 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே சமயம் 8 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.