ஜாஸ்மின் கால்இறுதி ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்து விடுவார்.
பாங்காக்,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதி சுற்று பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 57 கிலோ எடைபிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா 5-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தின் அனா மரிஜா மிலிசிக்கை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். அவர் கால்இறுதி ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்து விடுவார்.
இதன் ஆண்கள் 57 கிலோ எடைபிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சச்சின் சிவாச் 0-5 என்ற கணக்கில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான கார்லோ பாலமிடம் (பிலிப்பைன்ஸ்) பணிந்தார். அவர் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் சச்சின்-முனார்பெக் செய்ட்பெக்கை (கிர்கிஸ்தான்) எதிர்கொள்கிறார். இதில் சச்சின் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்.