கமலா ஹாரிஸுக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே நடந்த நேரடி விவாதத்தில் கமலா ஹாரிஸ் ப்ளூடூத் ஹெட்போன் உபயோகப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்பியா நகரில் தேசிய அரசியலமைப்பு மையத்தில், புதன்கிழமையில் டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையேயான நேரடி விவாதம் நடந்தது.
இந்த விவாதத்தின்போது, எந்தவகையான பொருள்களும் அனுமதிக்கப்படவில்லை. எழுதிக் கொண்டுவரப்பட்ட பேப்பரோ, எலக்ட்ரானிக் சாதனங்களோ எதுவும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. விவாதத்தில் இருவருக்கும் ஒரு பேப்பர், பேனா, ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது.
இந்த நிலையில், “விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் அணிந்திருந்த கம்மல், உண்மையான கம்மலே அல்ல; அது கம்மல் வடிவிலான ப்ளூடூத் ஹெட்போன்’’ என்ற சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, டிரம்ப்பின் ஆதரவாளர்கள்தான் இதுகுறித்த பிரச்னையை பரப்பி வருகின்றனர்.
அதாவது, கமலா ஹாரிஸ் அணிந்த கம்மல், ஐஸ்பாக் சவுண்ட் சொல்யூஷன்ஸின் 'நோவா எச் 1 ஆடியோ கம்மல்கள்’ என்று சர்ச்சை எழுந்துள்ளது; அதன் மதிப்பு சுமார் 625 டாலராம்.
இருப்பினும், நிபுணர்களும் உண்மைச் சரிபார்ப்பாளர்களும் “கமலா ஹாரிஸ் அணிந்திருந்தது உண்மையான கம்மல்களே; டிஃப்பனி & கோ நிறுவனத்தின் இரட்டை முத்து கம்மல்கள்தான் அவை. இது சுமார் 800 டாலருக்கு சில்லறை விற்பனை செய்யப்படுகிறது’’ என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான துணையதிபர் கமலா ஹாரிஸை எதிர்த்து, குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
உணவக உரிமையாளர் விவகாரம்: அமைச்சர், எம்எல்ஏ ஆணாக இருந்திருந்தால் இப்படி ஏற்பட்டு இருக்குமா?