கல்லறைகளை பாதுகாக்கத்தான் தொல்லியல்துறை உள்ளது போல தெரிகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலிலிருந்து வெறும் 20 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க அனுமதி தரப்பட்டிருக்கும் விவகாரத்தில், மதுரைக் கிளை நீதிமன்றம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சின்ராஜ் என்பவர் தொடர்ந்த பொது நலன் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட கோயில்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. சாலை விரிவாக்கத்திற்காக அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், தஞ்சை பெரிய கோயிலின் அருகே கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால், தஞ்சை பெரிய கோயிலின் வருங்காலம் என்னவாகும்?
தொல்லியல் துறையினரின் நடவடிக்கையைப் பார்த்தால், பழங்கால சின்னங்களை அல்ல, கல்லறைகளை பாதுகாப்பதே பணியாக நினைப்பதாகத் தெரிகிறது