69
சர்வதேச சிலம்பம் போட்டி மலேசியாவில் நடைபெற்றது.
சென்னை,
சர்வதேச சிலம்பம் போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் பல்வேறு வயது பிரிவினருக்கு ஒற்றை கொம்பு, வாள்வீச்சு, இரட்டை கொம்பு உள்பட பலவகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்களுக்கான 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவர் வெனய் ஸ்ரீராஜ் வாள்வீச்சில் தங்கப்பதக்கமும், ஒற்றை கம்பம் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்றார்.
இதேபோல் ஆண்கள் பிரிவில் சென்னை வீரர் எஸ்.சதீஷ் வாள்வீச்சில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். பதக்கம் வென்ற இருவரும் சென்னை சின்மயா நகரில் உள்ள நேதாஜி சிலம்பம் அகாடமியில் பயிற்சியாளர் சுபாஷ் பாண்டியிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.