சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா

by rajtamil
0 comment 31 views
A+A-
Reset

டி20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் கனடா அணியை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்றது.

டல்லாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் அமெரிக்கா – கனடா அணிகள் டல்லாஸ் நகரில் மோதின.

இதில் டாஸ் வென்ற அமெரிக்க அணியின் மோனாங்க் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவர்களில் 194 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நவ்நீத் தலிவால் 61 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா வெறும் 17.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்சர்கள் உட்பட 94 ரன்கள் குவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்த அணிகளின் சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீசை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

அந்த பட்டியல்:-

1. இங்கிலாந்து – 230 ரன்கள்

2. தென் ஆப்பிரிக்கா – 206 ரன்கள்

3. அமெரிக்கா – 195 ரன்கள்

4. வெஸ்ட் இண்டீஸ் – 193 ரன்கள்

5. ஆஸ்திரேலியா – 192 ரன்கள்.

You may also like

© RajTamil Network – 2024