சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதியில் தோல்வி

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

இந்தியாவின் திரிஷா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் சிஹாரு ஷிடா – மத்சுயுமா ஜோடியுடன் மோதியது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் சிஹாரு ஷிடா – மத்சுயுமா ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் திரிஷா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-23, 11-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சிஹாரு ஷிடா – மத்சுயுமா ஜோடியிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.

You may also like

© RajTamil Network – 2024