ஜம்மு – காஷ்மீரில் மாலை 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. வாக்குப்பதிவில் இதுவரை எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.
மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரண்டு முன்னாள் துணை முதல்வரகள் தாரா சந்த் மற்றும் முசாபர் பெய்க் உள்பட 415 வேட்பாளர்களின் தலைவிதியை 39.18 லட்சத்திற்கும் அதிகமான வாக்களர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் (24 தொகுதிகள்) 61.38 சதவீதமும், கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் (26 தொகுதிகள்) 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகின.
இந்த நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.67 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், மாலை 3 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பந்திபோராவில் 53.09 சதவீத வாக்குகளும், பாரமுல்லா 46.09%, ஜம்மு 56.74%, கதுவா 62.43%, குப்வாரா 52.98%, உதம்பூா் 64.43%, சம்பா 64.24% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.