தேர்தல் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வந்த ஓபிஎஸ்

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

தேர்தல் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வந்த ஓபிஎஸ்

சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களில் நேற்று வந்து கையெழுத்திட்டார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனியிடம் சுயேட்சை வேட்பாளாராகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர்ஒ.பன்னீர்செல்வம் தோல்வியடைந்தார். இதையடுத்து நவாஸ்கனியின் வெற்றியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக தாக்கல்செய்யப்பட்டுள்ள ஆவணங்களை சரிபார்த்து கையெழுத்திடுவதற்காக, ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார்.

வழக்கறிஞர்களுடன் உயர்நீதிமன்ற பதிவுத்துறை அலுவலகத்துக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து கையெழுத்திட்டார்.

You may also like

© RajTamil Network – 2024