நடிகர் கருணாசிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

by rajtamil
0 comment 46 views
A+A-
Reset

சென்னை,

சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், நடிகருமான கருணாசிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பையில் 2 பாக்ஸ்களில் இருந்த துப்பாக்கி குண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உடமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது.

தன்னிடம் துப்பாக்கி உரிமம் (லைசென்ஸ்) இருப்பதகாவும், அதற்கான குண்டுகள்தான் இவை என கருணாஸ் விளக்கம் அளித்துள்ளார். விமானத்தில் துப்பாக்கி குண்டுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்பது தெரியும் என்றும் அவசரமாக புறப்பட்டதால் பையில் இருந்த குண்டுகளை கவனிக்கவில்லை எனவும் அதிகாரிகளிடம் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் விமானத்தில் பயணிக்க கருணாசுக்கு அனுமதி மறுத்த பாதுகாப்பு படையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக திருச்சி விமானம் புறப்பட்டு சென்றது.

நடிகர் கருணாசிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024