நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசும் வெப்ப அலை – 54 பேர் பலி

by rajtamil
0 comment 35 views
A+A-
Reset

டெல்லி,

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் உச்சமடைந்து வருகிறது. டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வெப்ப அலை வீசி வருகிறது. டெல்லி உள்பட பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலை தாக்கத்தால் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பீகாரில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை தொடர்ந்து வீசி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024