தமிழகம் முழுவதும் சனிக்கிழமையான நாளை(செப்.14) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் குரூப் 2 தோ்வு சனிக்கிழமை (செப்.14) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 7.93 லட்சம் போ் எழுதுகின்றனா். தோ்வுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் விடியோ பதிவு செய்ய அரசுப் பணியாளா் தோ்வாணையம் உத்தரவிட்டுள்ளது.
விஜய்யின் கடைசிப் படம்! இன்று மாலை அப்டேட்!
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நடைபெறவுள்ளதையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை (செப். 14) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024-25ம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியில் திருத்தம் வெளியிடப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
“வணங்கான்” படத் தலைப்பு- இயக்குநர் பாலா பதிலளிக்க உத்தரவு
நாளை (14.09.2024) சனிக்கிழமை அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. தங்கள் ஆளுகைக்கு கீழ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இவ்விவரத்தினை தெரிவித்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.