Monday, October 7, 2024

“நூறாண்டு ஆனாலும் பாஜக வருந்தும்”- அன்னபூர்ணா விவகாரத்தில் ஜெயக்குமார் கண்டனம்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

அன்னபூர்ணா விவகாரத்தில் பாஜகவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், அதிகார மமதையில் ஆளும் பாசிச பாஜக அரசு!

மத்திய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை.

தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்தார்.

கேள்வி கேட்டால் அவமானப்படுத்தப்படுகிறார்கள்: அன்னபூர்ணா விவகாரத்தில் ராகுல் கடும் கண்டனம்!

அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல்!

அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்!

கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான்!

அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்கச் செய்வதா? வைரலாகும் விடியோ! நிர்மலா சீதாராமனுக்கு குவியும் கண்டனங்கள்!

இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!

இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024