படத்திற்கு கடுமையாக தயாராகும் ‘நான் ஈ’ பட நடிகர் – ஜிம்மில் எடுத்த புகைப்படங்கள் வைரல்

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

'நான் ஈ' பட நடிகர் கிச்சா சுதீப் ஜிம்மில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது இயக்குனர் அனுப் பண்டாரியுடன் நடிகர் கிச்சா சுதீப் இணைந்துள்ளார். இப்படத்திற்கு, 'பில்லா ரங்கா பாஷா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான கதாபாத்திரத்திற்கு கடுமையான உடலமைப்பு தேவைப்படுகிறது. அதனால் கிச்சா சுதீப் இடைவிடாமல் ஜிம்மிற்கு சென்று வருகிறார்.

இந்தநிலையில், கிச்சா சுதீப் ஜிம்மில் எடுத்த கட்டுமஸ்தான உடலமைப்புடன் கூடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 54 வயதிலும் கிச்சா சுதீப்பின் இந்த சிறந்த உடல் மாற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

View this post on Instagram

A post shared by KicchaSudeepa (@kichchasudeepa)

Original Article

You may also like

© RajTamil Network – 2024