பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அசரென்கா அதிர்ச்சி தோல்வி

by rajtamil
0 comment 50 views
A+A-
Reset

விக்டோரியா அசரென்கா ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரென்கா ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த அசரென்கா 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கு 3வது செட்டில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அசரென்கா 5-7 என்ற புள்ளிக்கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவிடம் தோல்வி கண்டார். இறுதியில் அசரென்கா 3-6, 6-3, 5-7 என்ற புள்ளிக்கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

You may also like

© RajTamil Network – 2024