20
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
பாரீஸ்,
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ரஷியாவை சேர்ந்த ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட மேட்டியோ அர்னால்டி யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 7-6 (8-6), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஆண்ட்ரே ரூப்லெவ்-க்கு அதிர்ச்சி அளித்தார். சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியுடைய ஒரு வீரராக பார்க்கப்பட்ட ரூப்லெவ் 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.