Wednesday, November 6, 2024

‘லப்பர் பந்து’ படத்தை பாராட்டிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

'லப்பர் பந்து' திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'லப்பர் பந்து'. இவர் 'கனா, எப்.ஐ.ஆர்' படங்களில் இணை இயக்குனர் மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு வசனம் எழுதியவர். இந்தப் படத்தில் ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ஹரிஷ் கல்யாண் இந்த திரைப்படத்தில் 'அன்பு' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அட்டகத்தி தினேஷ் 'கெத்து' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'லப்பர் பந்து' திரைப்படம் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், லப்பர் பந்து படத்தினை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாராட்டி உள்ளார். 'லப்பர் பந்து' படம் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது, இந்த வருடத்தில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக இது அமைந்துள்ளது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

#LubberPandhu – So well made and becomes my favourite movie of the year for its heart ❤️❤️❤️. Congrats team

— Santhosh Narayanan (@Music_Santhosh) October 5, 2024

Original Article

You may also like

© RajTamil Network – 2024