Table of Contents
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம்- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் அக்டோபர் இறுதியில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 சுழற்பந்து வீச்சாளர்கள்
ஒரு ஆண்டுக்குப் பிறகு சுழற்பந்துவீச்சாளர் செனுரன் முத்துசாமி அணிக்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே, அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் கேசவ் மஹராஜ் மற்றும் டேன் பெய்ட் இருவருடன் வலுவான சுழல் கூட்டணியில் இணைந்துள்ளார் செனுரன் முத்துசாமி.
மருத்துவமனையில் அனுமதி.. ரஜினி எப்படி இருக்கிறார்?
30 வயதான ஆல்-ரவுண்டர் செனுரன் முத்துசாமி கடைசியாக 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அணியில் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த அணியில் அனுபவமில்லாத வீரராக மேத்யூ ப்ரீட்ஸ்கே சேர்க்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்கான அணியை தெம்பா பவுமா தலைமைத் தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான முதல் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெறவுள்ளது.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி:தெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நான்ட்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, ரியான் ஆர் ஸ்டப்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரினே.
விமான சாகச ஒத்திகை: ஆச்சரியத்துடன் பார்த்த சென்னை மக்கள்
பயிற்சியாளர் கருத்து
இதுகுறித்து தென்னாப்பிரிக்க டெஸ்ட் தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் கூறுகையில், “ வங்கதேசத்தில் டெஸ்ட் தொடர் என்பது கடிமான ஒன்றாக இருக்கும். அவர்களுக்கு சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமானது. ஆனால், எங்களுக்கு பல சவால்கள் இருக்கின்றன. இதனால், எங்களது வெற்றிக்கு தேவையான ஒரு அணியைத் தேர்வு செய்துள்ளோம்.
எங்களிடம் மூன்று முன்னணியான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். செனுரன் போன்ற பேட்டர் மற்றும் சுழற்பந்துவீச்சாளருக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். அவரால் என் நிரூபிக்கமுடியும் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளோம்” என்றார்.