Monday, October 7, 2024

வங்கிக் கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வந்துவிட்டது..! துயரத்தைப் பகிர்ந்த 96 பட இயக்குநர்!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27-வது படமாகும். இப்படத்துக்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டுள்ளனர்.

இதன், முதல் பார்வை போஸ்டர். டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தில், நடிகர் அரவிந்த் சுவாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிக்க:கோட்: தெலுங்கு விநியோகஸ்தர்களுக்கு ரூ.13 கோடி நஷ்டம்!

இந்தப் படம் செப்.27 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. தொடர்ந்து, இசைத்தளங்கள் மற்றும் யூடியூபில் பாடல்கள் வெளியாகின.

அதில், ’நான் போகிறேன்’ மற்றும் ’யாரோ இவன் யாரோ’ எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரேம்குமார் பேசியதாவது:

96 படத்துக்குப் பிறகு எந்தப் படமும் பணியாற்றவில்லை. அதில் சம்பாதித்த அனைத்தையும் செலவு செய்துவிட்டேன்.

இதையும் படிக்க:விஜய் படம் கைவிடப்பட்டது ஏன்? பதிலளித்த இயக்குநர் சசிகுமார்!

வங்கிக் கையிருப்பு பூஜ்ஜியம்

தனியார் கல்லூரி ஒன்றில் பயிலரங்கத்துக்காக என்னை அழைத்திருந்தார்கள். நானும் கார் எடுத்துக்கொண்டு சென்றேன். எனது அக்கவுண்ட் ( வங்கிக் கையிருப்பு ) பூஜ்ஜியத்துக்கு வந்துவிட்டது தெரியவில்லை. எனது தனிப்பட்ட மேலாளர் என்னை அழைத்து அப்போதுதான் எச்சரித்திருந்தார்.

சரி, பரவாயில்லை என்று கிளம்பிவிட்டேன். அப்போது காரின் எரிபொருள் ரிசர்வ் நிலைமைக்கு வந்துவிட்டது. எனக்கு என்னவென்றால் கல்லூரி போகும்போது நின்றுவிடக்கூடாது. வேறெங்காவது நின்றுவிட்டால் நன்றாகவிருக்கும். இல்லையென்றால் அசிங்கமாகிவிடும் என இருந்தது.

அந்தக் கல்லூரியில் என்னை அழைத்ததுக்கு பயணச் செலவுக்காக சிறிது பணம் வைத்திருந்தார்கள். அதைப் பயன்படுத்தி அன்று எரிபொருளை நிரப்பினேன். அதற்கு அடுத்தநாள் நடிகர் கார்த்தியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அடுத்துதான் மெய்யழகன் படம் உருவானது.

You may also like

© RajTamil Network – 2024