வேலூரில் மதுபாட்டிலுக்குள் மிதந்த ஸ்டிக்கர் – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

by rajtamil
0 comment 121 views
A+A-
Reset

ஸ்டிக்கர் மிதந்த மதுபாட்டிலின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேலூர்,

வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் செல்வமூர்த்தி (வயது 44), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு 8.45 மணி அளவில் வேலூர் காகிதப்பட்டறையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் குவாட்டர் பிராந்தி பாட்டில் ஒன்றை வாங்கி சென்றார்.

பின்னர் அவர் தனது ஆட்டோவுக்கு டீசல் போட்டுவிட்டு வழக்கமாக மது அருந்தும் இடத்துக்கு சென்றார். அங்கு அவருடன் மது அருந்த நண்பர்களும் வந்திருந்தனர். அவர்கள் அந்த மதுபாட்டிலை பார்த்தபோது பாட்டிலுக்குள், பாட்டில் மூடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

இதுகுறித்து செல்வமூர்த்தி கூறுகையில், ரூ.140-க்கு உரிய மதுபாட்டிலை ரூ.145-க்கு விற்பனை செய்தனர். கூடுதலாக ரூ.5 செலுத்தி மதுபாட்டிலை வாங்கினேன். அதன் உள்ளே ஸ்டிக்கர் மிதந்தது. அதை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

மதுபான பாட்டிலுக்குள் ஸ்டிக்கர் மிதந்த சம்பவம் மதுபிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஸ்டிக்கர் மிதந்த மது பாட்டிலின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024