Wednesday, September 25, 2024

ஃபார்முலா கார் பந்தயத்திற்கு செல்பவர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

சென்னையில் நடைபெறும் ஃபார்முலா கார் பந்தயத்திற்கு செல்பவர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும்இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் ஆகஸ்ட் 31, 2024 (சனிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 1, 2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம்நடைபெற உள்ளது. தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னைதிகழ்கிறது.

இந்நிகழ்விற்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்றபயணத்தை வழங்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் உடன் இணைந்துஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ QR பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்குகிறது.

திருச்சி என்ஐடி சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்

"Paytm Insider" மூலம் முன்பதிவு செய்யப்பட்ட சரியானடிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்குமட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக டிஜிட்டல்மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும். இந்த மெட்ரோ பாஸ்பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ இரயில்நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிகஅருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில்நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும்.

நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் டிஜிட்டல் மெட்ரோபாஸில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கிகட்டணம் பெறும் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில்பயணிக்கலாம். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.

Paytm இன்சைடர் மூலம் வாங்கப்பட்ட டிஜிட்டல்டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர்செய்யப்பட்ட மெட்ரோ பயணம் கிடைக்கும். இந்தச் சலுகைக்குவேறு எந்த டிக்கெட்டுகளும் அல்லது பாஸ்களும் தகுதி பெறாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024