ஃபாஸ்டேக் புதிய விதிகள்: சிக்கலை தடுக்க KYC அப்டேட் பண்ணுங்க!

ஃபாஸ்டேக் புதிய விதிகள்: சிக்கலை தடுக்க அக்.31க்குள் KYC அப்டேட் பண்ணுங்க!

ஆகஸ்ட் 1, 2024 முதல் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மூலம் புதிய ஃபாஸ்டேக் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. NPCI அறிவித்துள்ள இந்த மாற்றங்களானது, ஃபாஸ்டேக் அமைப்பின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. டோல்கேட்டுகளில் கட்டணம் செலுத்துவதை எளிதாக்குவதற்கும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், டோல்கேட்டுகளில் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கவும் அனைத்து ஃபாஸ்டேக் யூசர்களும் KYC சரிபார்ப்பு செயல்முறைகளை அக்டோபர் 31 க்குள் முடிக்க வேண்டும். இந்த புதிய விதிகளின் காலக்கெடு அக்டோபர் 31, 2024 ஆகும்.

விளம்பரம்

புதிய ஃபாஸ்டேக் விதிமுறைகள்: முக்கிய மாற்றங்கள்

KYC புதுப்பிப்புகள்: மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அனைத்து ஃபாஸ்டேக்களுக்கும், அவற்றின் KYC விவரங்களை அக்டோபர் 31, 2024க்குள் புதுப்பிக்க வேண்டும். கூடுதலாக, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான பழைய ஃபாஸ்டேக் -ஐ மாற்ற வேண்டும்.

வாகனத் தகவல்களை இணைத்தல்:

அனைத்து ஃபாஸ்டேக்களும் உங்கள் வாகனத்தின் பதிவு எண், சேஸ் எண் மற்றும் உரிமையாளரின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். புதிய வாகனம் வாங்கியிருந்தால், 90 நாட்களுக்குள் உங்கள் ஃபாஸ்டேக்கில் பதிவு எண்ணைப் புதுப்பிப்பது முக்கியம்.

விளம்பரம்

புகைப்படப் பதிவேற்றம்:

வாகனத்தை எளிதாக அடையாளம் காண வசதியாக வாகனத்தின் முன் மற்றும் பின் பக்க புகைப்படங்கள் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் ஃபாஸ்டேக் உள்ளிட்ட தெளிவான புகைப்படங்களையும் பதிவேற்ற வேண்டும். சுமூகமான தகவல் தொடர்புக்காக ஒவ்வொரு ஃபாஸ்டேக்கையும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

மொபைல் எண்ணை இணைக்கவும்:

ஒவ்வொரு ஃபாஸ்டேக்கும் உரிமையாளரின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். FASTag வழங்குநர்களுக்கும் யூசர்களுக்கும் இடையே சுமூகமான தகவல்தொடர்புக்கு இந்த இணைப்பு முக்கியமானது.

டேட்டாபேஸ் வெரிஃபிகேஷன்:

ஃபாஸ்டேக் சேவை வழங்குநர்கள், ஒவ்வொரு ஃபாஸ்டேக் உடனும் இணைக்கப்பட்ட விவரங்களை இந்தியாவின் தேசிய வாகனப் பதிவேட்டில் உள்ள தகவல்களுடன் பொருந்துவதை உறுதிசெய்ய, தங்கள் டேட்டாபேஸ்களைச் சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும்.

விளம்பரம்

Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

சமீபத்தில், NHAI வாகன ஓட்டிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. வாகனத்தின் முன் கண்ணாடியில் ஃபாஸ்டேக் பொருத்தப்படாவிட்டால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காரில் FASTag ஒட்டாததால் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது என NHAI தெரிவித்துள்ளது. இதனால், வாகனங்கள் அணிவகுத்து நின்றன, மேலும், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த போக்குவரத்தை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே ஃபாஸ்டேக் பொருத்தப்படாத வாகன ஓட்டிகளிடம் இருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்க NHAI முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Fastag

Related posts

Pakistan: 7 Labourers From Multan Killed In Terrorist Attack In Balochistan’s Panjgur

Kerala Launches New Entrance Training Programme Benefiting Over 8 Lakh Students

AI Express-AIX Connect Merger In October First Week; ‘I5’ To Fly Into Sunset