Saturday, September 21, 2024

அக்னிபாத் விதிகள் மாற்றப்படுகிறதா? விரைவில் மத்திய அரசு ஆலோசனை

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

அக்னிபாத் விதிகளில் மாற்றம் கொண்டு வருகிறதா மத்திய அரசு..? விரைவில் ஆலோசிக்க திட்டம்!அக்னிபத் திட்டம்

அக்னிபத் திட்டம்

அக்னிபாத் திட்டத்தின் நடைமுறை விதிகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படுபவர்களில் 75 முதல் 80 சதவிகிதம் பேர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்தில் பணியாற்ற இயலாது. இந்த நடைமுறையை மாற்றி 60 முதல் 70 சதவிகித வீரர்களை ராணுவத்தில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிற மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

இதனிடையே, அக்னிபாத் திட்டத்தில் தொழில்நுட்ப பிரிவு வீரர்களின் ஓய்வு வயதை 21ல் இருந்து 23 ஆக உயர்த்தவும், பணி காலத்தை 7 முதல் 8 ஆண்டுகளாக உயர்த்தவும் இந்திய ராணுவம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரின் போது உயிரிழக்கும் அக்னி வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கவும் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

விளம்பரம்இதையும் படிங்க – இயற்கையின் கொடையான கொட்டாங்குச்சியில் கலைவண்ணம்… கடவுள் உருவங்களை நேர்த்தியாக செய்து அசத்தும் 60 வயது முதியவர்…

இதுதொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஆலோசனைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க – ”400 தொகுதிகள்” மோடி பிரச்சாரத்தால் தோல்வி – மகாராஷ்டிர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு!

முன்னதாக அக்னிபாத் திட்ட நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Agnipath

You may also like

© RajTamil Network – 2024