Saturday, September 21, 2024

அங்கே தவறு செய்வதற்கு இடமில்லை – இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருக்கு அல்பி மோர்கல் அட்வைஸ்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் இந்திய முன்னாள் வீரர் அபிஷேக் நாயர், நெதர்லாந்து அணியின் முன்னாள் வீரர் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் துணை பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே போல தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் எதிர்வரும் வங்காளதேச டெஸ்ட் தொடருடன் ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா போன்ற தரமான வீரர்கள் நிறைந்திருப்பதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரும், மோர்னே மோர்கலின் சகோதரருமான அல்பி மோர்கல் தெரிவித்துள்ளார். எனவே இந்திய அணியில் தமது சகோதரர் மோர்னே மோர்கல் தவறு செய்வதற்கு இடமே இல்லை என்று அல்பி மோர்கல் கூறியுள்ளார். மேலும் இந்திய வீரர்களின் தன்னம்பிக்கையை பெற்று அவர்களுக்கு உதவினால் மோர்னே மோர்கல் மிகச்சிறந்த பயிற்சியாளராக வருவார் என்றும் அல்பி தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இருப்பது மிகப்பெரிய பொறுப்பு என்று யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தியாவில் விளையாட்டின் மீதான ஆர்வம் மற்றும் கடந்த காலங்களில் பெற்ற வெற்றிகள் ஆகியவை அவர்களின் அணியில் தவறு செய்வதற்கு இடமில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நிறைய சாதித்த சில நல்ல வீரர்களை கொண்டுள்ளனர். எனவே என்னைப் பொறுத்த வரை அவருக்கு இது இந்திய வீரர்களின் திறமையை முன்னேற்ற உதவக்கூடிய வேலையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அவருடன் பயிற்சியாளர் குழுவில் நான் வேலை செய்ததில்லை. ஆனால் பெரும்பாலான சூழ்நிலைகளில் பந்து வீச்சாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை பற்றிய அனுபவம் அவரிடம் நிறைய உள்ளது. எனவே அதை தன்னுடைய பயிற்சியில் உட்புகுத்தினால் அவர் இந்திய அணியில் நிறைய மதிப்பை ஏற்படுத்த முடியும்" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024