Saturday, September 21, 2024

அச்சுறுத்தும் நிஃபா வைரஸ்… இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

Nipah Virus : நிஃபா வைரஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?Nipah Virus : நிஃபா வைரஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

கேரள மாநிலம் மலப்புரம் அருகே 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி தெரியவந்தது. புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டார்.

பின்னர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தரப்பட்டு வந்தது. அவருக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். ஆனால், மருந்து செலுத்துவதற்கு முன்பாகவே சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

விளம்பரம்

சிறுவனுக்கு தொடர் சிகிச்சை தரப்பட்ட நிலையில் காலை 10.50 அளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் 11.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சிறுவனுடன் தொடர்பில் இருந்ததாக 246 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அதில் 63 பேர் தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் என்றும் கேரள மருத்துவத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹீமோகுளோபின் அளவு கட கடனு இன்க்ரீஸ் ஆகணுமா.? அப்போ இதை மட்டும் சாப்பிடுங்க.!
மேலும் செய்திகள்…

நிபா பாதிப்பின் அறிகுறிகள் உள்ள 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாண்டிக்காடு, அனக்காயம் ஊராட்சிகளில் அதிக பாதிப்புகள் இருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதால் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

விளம்பரம்

கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் சுவாச நோய்த்தொற்று ஆகியவை நிபா வைரஸின் அறிகுறிகளாக கூறப்படுகின்றன. நோய் தீவிரமடையும் போது, வலிப்பு ஏற்படலாம் என்றும் அது தொடரும் பட்சத்தில் மூளை வீக்கம் ஏற்பட்டு நோயாளி கோமா நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக இந்தவகை நோய் பன்றி, வௌவால் போன்றவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும். அதனாலேயே விலங்குகள், பறவைகள் பாதி சாப்பிட்டு வீசப்பட்ட பழங்களை உட்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தான நோய் வராமல் தடுக்க தினமும் வாழைப்பழம் சாப்பிடுங்கள்.!
மேலும் செய்திகள்…

இந்நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை என்பதாலும், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும் என்பதாலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, கோழிக்கோடுக்கு BSL-3 ரக மொபைல் ஆய்வகங்களையும், மோனோ குளோனல் மருந்துகளையும் ICMR அனுப்பி உள்ளது.

விளம்பரம்

கேரள எல்லையோரம் உள்ள தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ள தமிழ்நாடு அரசு, நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

நிபா தொற்று அறிகுறி உள்ள நோயாளிகளை உடனடியாக கண்டறிந்து உரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிசோதனையின் முடிவுகளை சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும் என்றும் கிணறுகள், குகைகள், தோட்டங்கள், இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kerala
,
Nipah Virus

You may also like

© RajTamil Network – 2024