அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ இடங்கள்- பிரதமர் மோடி

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ இடங்கள்… பிரதமர் மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!பிரதமர் மோடி

பிரதமர் மோடி

78வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, அடுத்த ஐந்தாண்டுகளில் 75,000 மருத்துவ இடங்களை அறிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் மருத்துவ இடங்களை வழங்கினோம். மருத்துவக் கல்வி பெறுவதற்காக சுமார் 25,000 இளைஞர்கள் வெளிநாடு செல்கின்றனர். அதனால்தான் வரும் ஐந்தாண்டுகளில், 75,000 புதிய இடங்கள் உருவாக்கப்படும்’ என்று கூறினார். ‘விக்சித் பாரத் 2047’-ன் முதல் தலைமுறைக்காக நாங்கள் ‘ராஷ்ட்ரிய போஷன் மிஷன்’-ஐ தொடக்கியுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.

விளம்பரம்

ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது பிரதமர் என்ற பெருமையை பெற்ற பிரதமர் மோடி, சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து 11வது முறையாக நாட்டு மக்களுக்கு தனது உரையை ஆற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் கருப்பொருள் ‘விகிஸ்ட் பாரத் 2024’ ஆகும். இது 2047ஆம் ஆண்டிற்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்யும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 2,000 பேர் பாரம்பரிய உடை அணிந்து, டெல்லி செங்கோட்டையில் பிரமாண்ட விழாவைக் காண வந்திருந்தனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Independence day
,
Medical seat
,
PM Modi

You may also like

© RajTamil Network – 2024