2
அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”இன்று(அக். 30) பகல் 12 முதல் 1 மணி வரை அதிகபட்சமாக அண்ணாநகர் மேற்கு பகுதியில் 90 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அதேபோல், மணலி புதுநகர், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை பகுதிகளில் 60 மி.மீ. மழை” பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தீபாவளி பண்டிகை: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்ட நிலையில், கொளத்தூர், பெரம்பூர், மணலி, நெற்குன்றம், அண்ணாநகர், அமைந்தகரை ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.