அதிகாரத்தை பிறப்புரிமையாக கருதும் மூன்று குடும்பங்கள்! ஸ்ரீநகரில் மோடி

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

அதிகாரத்தை கைப்பற்றுவதை பிறப்புரிமையாக மூன்று குடும்பங்கள் கருதுவதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் பாரதிய ஜனதா கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், காங்கிரஸ், மக்கள் ஜனநாயகம் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகள் உங்களை கொள்ளையடிப்பார்கள் என்று பேசினார்.

இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம்

ஜம்மு – காஷ்மீரில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ள பிரதமர் மோடி, ஸ்ரீநகருக்கு சென்றுள்ளார்.

ஸ்ரீநகர் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது:

இந்த கூட்டத்தில் குவிந்துள்ள ஏராளமான இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் தாய்மார்களின் பார்வையில் உற்சாகமும், அமைதியும் தெரிகிறது. இது புதிய காஷ்மீர். நாம் அனைவரின் நோக்கமும் ஜம்மு – காஷ்மீரின் விரைவான வளர்ச்சியே.

ஜம்மு – காஷ்மீர் மக்கள் எவ்வாறு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறார்கள் என்று உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஜம்மு – காஷ்மீரின் அழிவுக்கு மூன்று குடும்பங்களே காரணம் என்று கடந்த முறை வந்திருந்தபோது கூறியிருந்தேன். அன்றிலிருந்து மூன்று குடும்பமும் பீதியில் உள்ளது.

சென்னை: சூட்கேசில் பெண் உடல்.. குற்றவாளியைக் காட்டிக்கொடுத்த சிசிடிவி

இந்த மூன்று குடும்பமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது அவர்களின் பிறப்புரிமையாக கருதுகின்றனர். ஆட்சிக்கு வந்து உங்களை கொள்ளையடிக்கிறார்கள். ஜம்மு – காஷ்மீர் மக்களின் நியாயமான உரிமைகளைப் பறிப்பதே அவர்களின் அரசியல். பயத்தையும் அராஜகத்தை மட்டுமே கொடுத்துள்ளனர். ஆனால், இனி அவர்களின் பிடியில் ஜம்மு – காஷ்மீர் இருக்காது. அவர்களுக்கு சவால் விடுவதற்கு நம் இளைஞர்கள் காத்துள்ளனர்.

இவர்களின் ஆட்சியால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள இன்றைய இளைஞர்கள் அவர்களின் கல்வியை இழந்துள்ளனர். 10 மற்றும் 12ஆம் வகுப்பை அடைய நீண்ட நாள்கள் எடுத்துக் கொண்டது மாணவர்களின் தோல்வி அல்ல, மூன்று குடும்பங்களின் தோல்வி.

சொந்த ஆதாயத்துக்காக மாணவர்களின் கைகளில் கற்களை கொடுத்தனர். பயங்கரவாதத்தில் இருந்து ஜம்மு – காஷ்மீர் விடுவிக்கப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்ட உண்மையாக உழைத்து வருகிறோம். தற்போது, ஜம்மு – காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் முழு அளவில் செயல்படுகிறது. பள்ளிகளுக்கு தீ வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாவதில்லை. மாறாக புதிதாக பள்ளி, கல்லூர், எய்ம்ஸ், ஐஐடிக்கள் கட்டப்படுவதாக செய்திகள் வருகின்றன.

கடந்த 35 ஆண்டுகள் 3,000 நாள்கள் காஷ்மீர் முடங்கியிருந்தது. ஆனால், கடந்த ஆண்டுகளில் 8 மணிநேரம் கூட முடங்கவில்லை” எனத் தெரிவித்தார்.

பாஜக வாக்குறுதிகள்

தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் செய்யக் கூடிய வாக்குறுதிகளை மோடி அறிவித்தார்.

ஆண்டுதோறும் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குகளிலும் ரூ. 6,000-க்கு பதிலாக ரூ. 10,000 டெபாசிட் செய்யப்படும், குடும்பத்தின் பெண் தலைவருக்கு ஆண்டுக்கு ரூ. 18,000, மருத்துவ சிகிச்சைக்கான காப்பீடு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்படும், வீட்டின் மாடியில் சோலார் அமைக்க ரூ. 80,000 மானியம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024