Thursday, November 7, 2024

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: எவ்வளவு குறைந்தது தெரியுமா?

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

சென்னை: சென்னையில் ஆபணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை(நவ.7) ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.

அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகித குறைப்பை நவம்பா் மாதத்தில் அமலுக்கு கொண்டுவரவுள்ளதாகவும், அதேபோன்று ஐரோப்பிய மத்திய வங்கியும் அதன் வட்டியைக் குறைப்பதாக அறிவித்திருந்தது. இதுபோன்ற சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்தது. இதையடுத்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்கம் விலை பவுன் ரூ.60,000-ஐ தொடக்கூடும் என்று கூறப்பட்டது. இது நகை பிரியர்களிடையை அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதனிடையே, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு பின்னர் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

இந்த நிலையில், அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக குடியரசுக் கட்சியை சோ்ந்த டொனால்ட் டிரம்ப் மீண்டும் தோ்வாகியுள்ள நிலையில், ஆபணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை(நவ.7) ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. இது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க |கன்னட பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோவில் ஆதினம்!

அதாவது சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365 விற்பனையான நிலையில், வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ. 57,600-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

அதேபான்று வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3000 குறைந்து ரூ.1,02,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024