Friday, September 20, 2024

அந்த பாகிஸ்தான் பவுலர் பந்தை சேதப்படுத்தினார் – ஐ.சி.சி.-யிடம் முன்னாள் அமெரிக்க வீரர் முறையீடு

by rajtamil
0 comment 38 views
A+A-
Reset

அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவூப் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக ரஸ்டி தெரான் முறையிட்டு இருக்கிறார்.

நியூயார்க்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் "ஏ" பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் – அமெரிக்கா அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் வழக்கமான 20 ஓவர்கள் முடிவில் சரிசமமாக 159 ரன்கள் எடுத்தன. இதை அடுத்து சூப்பர் ஓவர் நடந்தது. அதில் அமெரிக்க அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் அமெரிக்கா பேட்டிங் செய்த இன்னிங்சில் கொண்டுவரப்பட்ட புதிய பந்தை பாகிஸ்தான் ஹரிஸ் ரவூப் தன்னுடைய நகத்தால் சேதப்படுத்தியதாக அமெரிக்க அணியின் முன்னாள் வீரரான ரஸ்டி தேரன் விமர்சித்துள்ளார். போட்டியின்போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவூப் தன் நகத்தைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியதாகவும், அதன் மூலம் அவர் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ததாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இந்தப் போட்டியில் அமெரிக்க அணி பேட்டிங் செய்தபோது பாகிஸ்தான் அணி 12-வது ஓவருக்கு பின் பந்தை மாற்றியே ஆக வேண்டும் என அம்பயரிடம் வாக்குவாதம் செய்தது. பின்னர் அம்பயர்கள் இரண்டாவது பந்தை எடுக்க ஒப்புக்கொண்டனர். 12வது ஓவரின் முடிவில் பந்து மாற்றப்பட்டது. அதன் பின் 14 வது ஓவரை ஹரிஸ் ரவூப் வீசினார்.

அந்த ஓவரில்தான் பாகிஸ்தான் அணி முக்கிய விக்கெட்டான ஆன்ட்ரியாஸ்-ஐ வீழ்த்தியது. அந்த ஓவரில் ஹரிஸ் ரவூப் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். பொதுவாக பழைய பந்தில்தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். அப்படி என்றால் புதிய பந்தை மாற்றி பின் எவ்வாறு ஹரிஸ் ரவூப் ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்? என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில்தான் ஹரிஸ் பந்தை சேதப்படுத்தியதாக ரஸ்டி தெரான் குற்றம் சுமத்தி இருக்கிறார். ஹரிஸ் ரவூப் பந்து வீசும் முன் தன் நகங்களால் பந்தை சுரண்டி சேதப்படுத்தியதாகவும், அதன் மூலம் பந்து தனது வடிவத்தை இழந்து, பின்னர் ரிவர்ஸ் ஸ்விங் ஆனதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் தெரான். இது குறித்து அவர் சமூக ஊடகத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) முறையிட்டு இருக்கிறார்.

@ICC are we just going to pretend Pakistan aren’t scratching the hell out of this freshly changed ball? Reversing the ball that’s just been changed 2 overs ago? You can literally see Harris Rauf running his thumb nail over the ball at the top of his mark. @usacricket#PakvsUSA

— Rusty Theron (@RustyTheron) June 6, 2024

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024