Friday, September 20, 2024

அனந்த் அம்பானியின் ‘மங்கள் உத்சவ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்!

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்குப் பிந்தைய ‘மங்கள் உத்சவ்’ நிகழ்ச்சி கோலாகலம்… நடிகர், நடிகைகள், விளையாட்டு பிரபலங்கள் நேரில் வாழ்த்து!அம்பானி வீட்டு திருமண விழா

அம்பானி வீட்டு திருமண விழா

அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்குப் பிந்தைய ‘மங்கள் உத்சவ்’ நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் அனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்செண்ட் திருமண நிகழ்வுகள் உலகமே வியக்கும் அளவுக்கு நடைபெற்றன.

திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிலையில் கடந்த 12ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பிரதமர் மோடி , சச்சின் டெண்டுகல்கர், ரஜினிகாந்த் என ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விளம்பரம்

திருமண விழாவின் 3-ஆம் நாள் கொண்டாட்டமாக மங்கள் உத்சவ் என்ற நிகழ்ச்சி மும்பை ஜியோ சர்வதேச மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை நீடா அம்பானி உற்சாகமாக வரவேற்றார். விழாவில், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்தவரான நடிகர் ஜாக்கி ஷெராப் அவரது மகன் டைகர் ஷெராப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல், கோவிந்தாவும் பங்கேற்றனர்.

நடிகைகள் தமன்னா, நடிகை ரகுல் பிரீத் சிங், அதிதி ராவ், பிபாஷா பாசு உள்ளிட்டோரும் அலங்கார ஆடை உடுத்து நளினத்துடன் அணிவகுத்தனர். “மங்கள் உத்சவ்” நிகழ்ச்சியிலும் மனைவியுடன் இயக்குநர் அட்லி கலந்து கொண்டார்.

விளம்பரம்

இதே போல, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பாய்ச்சுங் பூட்டியா உள்ளிட்டோரும், கலந்து கொண்டனர்.

கோலாகலமாக நடந்த இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களின் வாழ்த்து மழையில் மணமக்கள் நனைந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

You may also like

© RajTamil Network – 2024