Tuesday, September 24, 2024

அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் பிரம்மாண்ட திருமண விழா ஹைலைட்ஸ்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

உலகே வியந்த பிரமாண்டம்…! அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் பிரம்மாண்ட திருமண விழா ஹைலைட்ஸ்ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்

திருமணம் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இல்லத் திருமண விழா என்றால் சொல்லவா வேண்டும். உலகையே இந்த திருமணம் பிரமிக்க வைத்துள்ளது.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவன தலைமை செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் 7 -ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. குஜராத்தி மொழியில் கோல் தானா (“Gol Dhana”) என்ற அழைக்கப்படும் நிச்சயதார்த்த விழாவில் உலக அழகி ஐஸ்வர்யோ ராய், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்தினர்.

விளம்பரம்

7 மாதங்களாக நடைபெற்ற பல்வேறு விழாக்களின் இறுதிகட்டமாக, மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச மாநாட்டு மையத்தில் திருமண விழா களைகட்டியது. இதற்காக வாரணாசி போன்று திருமண அரங்கு, வடிவமைக்கப்பட்டிருந்தது.

3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, ஆண்டிலா இல்லத்திலிருந்து ஜியோ மையத்துக்கு முகேஷ் அம்பானி குடும்பத்தினர் புறப்பட்டனர். வெள்ளை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற காரில் மணமகன் அழைத்துவரப்பட்டார். வாத்திய இசைகள் முழங்க நடனமாடியபடி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மணமகனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
”என் இதயத்தின் இரண்டு பகுதிகள்” – உணர்ச்சிவசப்பட்ட நீடா அம்பானி!

பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு மத்தியில், ஜியோ மையத்துக்கு முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி, மணமகன் அனந்த் அம்பானி, மூத்த மகன் ஆகாஷ், மகள், மருமகன் உள்ளிட்டோர் வந்தடைந்தனர்.

பின்னர் பாரம்பரிய முறைப்படி, safaa என்ற மணமகனுக்கு தலைப்பாகை கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மணமகனை தொடர்ந்து முகேஷ் அம்பானி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் தலைப்பாகை அணிந்துகொண்டனர்.

மண்டபத்துக்குள் மணமகன் மற்றும் குடும்பத்தினர் வந்தபோது, பெருமளவில் விருந்தினர்கள் குவிந்திருந்தனர். அனில் கபூர் நடித்த இந்தி படத்தின் பாடலுக்கு மணமகனுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த், அனில் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடனமாடி விருந்தினர்களுக்கு உற்சாக மூட்டினர்.

விளம்பரம்

மணமகனை pokhna என்ற பாரம்பரிய முறைப்படி, மணமகளின் குடும்பத்தினர் வரவேற்றனர். மணமகள் ராதிகா மெர்ச்சன்டின் தாய் ஷைலா மெர்ச்சன்ட் ஆரத்தி எடுத்து வரவேற்றார். மறுமுனையில், மணமகள் ராதிகா மெர்ச்சன்ட், குஜராத் பாரம்பரிய உடையணிந்தபடி, மயில் தெப்பம் போன்ற வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.

ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த ஆடையின் சிறப்புகள் தெரியுமா.?
மேலும் செய்திகள்…

மணமகளை வரவேற்கும் வகையில், ஷ்ரேயா கோஷல் பாடிக் கொண்டிருந்தபோது, மணமகளை அவரது தந்தை அழைத்துச் சென்றார். உறவினர்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் முன்னிலையில் மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றும் நிகழ்ச்சி அரங்கேறியது.

விளம்பரம்

இரவு 9 மணிக்குப் பிறகு, அக்னி குண்டத்தை மணமகனும், மணமகளும் 7 முறை சுற்றிவர இனிதே திருமணம் அரங்கேரியது. இந்த பிரம்மாண்ட திருமணம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ட்ரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
mukesh ambani
,
Nita Ambani

You may also like

© RajTamil Network – 2024