Tuesday, September 24, 2024

அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டை வாழ்த்திய தோனி…

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டை வாழ்த்திய தோனி… இணையத்தில் லைக்ஸை குவிக்கும் ஃபோட்டோ!ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் உடன் தோனி - சாக்ஷி சிங்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் உடன் தோனி – சாக்ஷி சிங்

அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமணத்தையொட்டி, அவர்களை மனைவி சாக்ஷியுடன் வாழ்த்தியுள்ளார் தோனி. இது தொடர்பான ஃபோட்டோவை சாக்ஷி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமண கொண்டாட்டங்கள் சுமார் ஓராண்டாக உலகமே வியக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் திருமண கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பிரதமர் மோடி வரை ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் 3 ஆம் நாள் கொண்டாட்டமாக மங்கள் உத்சவ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

விளம்பரம்

இதுபோன்ற திருமணம் இனி நடக்குமா என கேட்கும் அளவுக்கு மிக பிரமாண்டமாக தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முகேஷ் அம்பானி நடத்தி வருகிறார்.

நேற்று நடைபெற்ற சுப ஆசிர்வாத நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி, அவரது மனைவி சாக்ஷி மகள் ஜிவா, கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் சுனில் ஷெட்டி, அதியா ஷெட்டி, கே.எல். ராகுல், ரன்பிர் கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

விளம்பரம்இதையும் படிங்க – ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண சுப ஆசிர்வாத நிகழ்ச்சி… குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

மணமக்கள் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்டை தோனி தனது மனைவியுடன் இணைந்து வாழ்த்தியுள்ளார்.

இவர்கள் 4 பேரும் இணைந்து எடுத்துள்ள ஃபோட்டோவை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு 13 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்துள்ளன.

விளம்பரம்

Ms dhoni wishes anant ambani radhika merchant with sakshi photo viral in instagram ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமணத்தையொட்டி, அவர்களை மனைவி சாக்ஷியுடன் வாழ்த்தியுள்ளார் தோனி. இது தொடர்பான ஃபோட்டோவை சாக்ஷி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
MS Dhoni

You may also like

© RajTamil Network – 2024