Sunday, September 22, 2024

அன்னபூர்ணா விவகாரம்: அமைச்சர், எம்எல்ஏ ஆணாக இருந்திருந்தால் இப்படி ஏற்பட்டு இருக்குமா?

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

உணவக உரிமையாளர் ஜிஎஸ்டி குறித்து பேசியதற்கு, அமைச்சர் மற்றும் எம்எல்ஏ ஆணாக இருந்திருந்தால் இதுபோன்ற சூழல் ஏற்பட்டு இருக்குமா என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் ஜிஎஸ்டி பற்றி நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் கேள்வி எழுப்பிய விடியோ கடந்த இரு நாள்களாக டிரெண்ட் ஆனது.

இதனைத் தொடர்ந்து, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் மன்னிப்புக் கேட்கும் விடியோ தற்போது அகில இந்திய அளவில் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அன்னபூர்ணா விவகாரம்: மன்னிப்புக் கோரினார் அண்ணாமலை!

இந்த நிலையில், இது தொடர்பாக கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

ஒரு பெண் எம்எல்ஏ உங்கள் கடையில் சாப்பிட்டதை எப்படி பொது வெளியில் கூறலாம்? இது முறையா? என்றுதான் உணவக உரிமையாளரிடம் மத்திய நிதியமைச்சர் கேட்டார்.

உணவக உரிமையாளர் தாமாக முன்வந்துதான் மன்னிப்புக் கோரினார். பாஜக தரப்பு யாரையும் மிரட்டவில்லை. ஜிஎஸ்டி குறித்த கேள்விக்கு பதிலளிக்கத்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்கச் செய்வதா? வைரலாகும் விடியோ! நிர்மலா சீதாராமனுக்கு குவியும் கண்டனங்கள்!

நான் அவர் கடையில் ஜிலேபி சாப்பிட்டதும் இல்லை, சண்டை போட்டதும் இல்லை என்று அங்கே கூறியிருக்க முடியும். ஆனால் பொதுவெளியில் அதைப்பற்றி நான் எதுவும் பேசவில்லை.

அரசியலில் பெண்களுக்கு சமவாய்ப்புகளோ, சமமரியாதை இருக்கிறதா என்று கேட்டால், நான் இல்லையென்றுதான் சொல்லுவேன். அதே மேடையில் ஒரு ஆண் அமைச்சர், ஆண் எம்எல்ஏ இருந்து இருந்தால் இதுபோன்ற பேச்சுகள் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு இருக்குமா?

பெண் அரசியல் தலைவர்கள் போகும்போதுதான் அவர்களை சூழ்ந்துகொண்டு கேள்விக் கேட்கிறார்கள்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024