‘அமரன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது

'அமரன்' படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாவதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் 'அமரன்' படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் 'அமரன்' படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Witness the Heart behind the Warriors shield.From Tomorrow #Amaran#AmaranDiwali#AmaranOctober31#Ulaganayagan#KamalHaasan#Sivakarthikeyan#SaiPallavi#RajkumarPeriasamyA Film By @Rajkumar_KP@ikamalhaasan@Siva_Kartikeyan#Mahendran@gvprakash@anbariv@Sai_Pallavi92pic.twitter.com/K7e9A3YUxq

— Raaj Kamal Films International (@RKFI) September 26, 2024

Original Article

Related posts

‘அவர் சாதாரண நடிகர் கிடையாது’ – ரஜினிகாந்த் பாராட்டியது யாரை தெரியுமா?

‘புஷ்பா 2’ படப்பிடிப்பு தளத்தில் எஸ்.எஸ்.ராஜமவுலி – வைரலாகும் புகைப்படம்

பிரபாஸ் படத்தில் வில்லனாக களமிறங்கும் பாலிவுட் ஜோடி?