அமலா பாலின் ‘லெவல் கிராஸ்’ படம் ஓ.டி.டி.யில் வெளியானது

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

அமலா பால் நடிப்பில் வெளியான 'லெவல் கிராஸ்' படம் தற்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

சென்னை,

'மைனா, வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது 2014-ல் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

பின்னர் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு படங்களில் அவர் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். அதன் உச்சமாக 'ஆடை' படத்தில் நிர்வாணமாக நடித்தார். இயக்குனர் விஜய் உடனான மண முறிவுக்குப் பிறகு, சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவர், கடந்த ஆண்டு தனது நண்பர் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளியான 'தி டீச்சர், போலா, ஆடு ஜீவிதம்' படங்கள் நல்ல கவனம் பெற்றன. தற்போது பிரபல இயக்குநர் ஜித்து ஜோசப் வழங்கும் 'லெவல் கிராஸ்' படத்தில் நடித்துள்ளார். ஜித்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக இருந்த அர்பாஜ் அயூப் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இது உளவியல் திரில்லர் திரைப்படமாகும். இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்தப் படத்தில் தான் நடிகை அமலா பால் பாடகியாக முதல்முறையாக அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

View this post on Instagram

A post shared by Amala Paul (@amalapaul)

இந்த நிலையில் இப்படம் இன்று அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து நடிகை அமலா வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Amala Paul (@amalapaul)

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024