Tuesday, September 24, 2024

அமிதாப் பச்சனின் பாடலுக்கு நடனமாடிய பா.ஜ.க. எம்.எல்.ஏ – வீடியோ வைரல்

by rajtamil
Published: Updated: 0 comment 9 views
A+A-
Reset

சத்ரபதி சம்பாஜிநகர்,

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள கங்காபூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிரசாந்த் பாம். இவர் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் ஹிட் பாடலான "கைகே பான் பனாரஸ் வாலா" என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மராத்வாடா பிராந்தியத்தில் கனமழை, வெள்ளம் காரணமாக பயிர்கள் நாசமடைந்து விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் எம்.எல்.ஏ. நடனமாடிக் கொண்டிருக்கிறார் என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். இதனிடையே சிலர் அவரது நடன அசைவுகளை பாராட்டியும் கமெண்ட் செய்துள்ளனர்.

இது தொடர்பாக பிரசாந்திடம் கேட்டபோது, "எனது கட்சித் தொண்டர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மயிஸ்மாலில் இந்த ஆண்டு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நான் நடனமாடினேன். இதில் எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024