Saturday, September 21, 2024

அமிதாப், ஷாருக் இல்லை…இந்தியாவின் முதல் ரூ.100 கோடி ஹிட் படத்தை கொடுத்த நடிகர் யார் தெரியுமா?

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படங்கள் ரூ.100 கோடி வசூலை ஈட்டுகின்றன

சென்னை,

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படங்கள் ரூ.100 கோடி வசூலை ஈட்டுகின்றன. அதில், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களின் படங்கள் அடங்கும். ஆனால், இதில் யாரும் இந்தியாவின் முதல் ரூ.100 கோடி ஹிட் படத்தை கொடுக்கவில்லை.

1982-ம் ஆண்டு வெளியான படம் டிஸ்கோ டான்சர். இப்படத்தில் கதாநாயகனாக மிதுன் சக்ரவர்த்தி நடிக்க, கல்பணா ஐயர், ராஜேஷ் கன்னா, கிம் யஷ்பால் மற்றும் ஓம் பூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

டிஸ்கோ டான்சர் இந்தியாவில் மட்டும் ரூ.6 கோடிக்கு மேல் வசூலித்தது. அதன்பின்னர், 1984-ம் ஆண்டு சோவியத் யூனியனில் இப்படம் வெளியானது. அங்குதான் இப்படத்தின் பெரும்பாலான தொகை வசூலானது. ரஷ்யாவில் வெளியாகி தோராயமாக ரூ. 94.28 கோடி வசூல் ஈட்டியது. இதன் மூலம் டிஸ்கோ டான்சரின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.100.68 கோடியாக உள்ளது.

1984 வரை, உலகளவில் 30 கோடி ரூபாய் வசூலித்த ஷோலேதான் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாக இருந்தது. டிஸ்கோ டான்சர் அதை விட 3 மடங்கு அதிகமாக வசூலித்தது. இதன் மூலம் மிதுன் சக்ரவர்த்தி, ரூ.100 கோடி ஹிட் கொடுத்த முதல் இந்திய நடிகர் ஆனார். அதுவரை அமிதாப் பச்சன் கூட சாதிக்காத ஒன்று இது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024