அமெரிக்காவில் இந்து கோயில் மீது தாக்குதல்: 10 நாள்களில் 2வது முறை!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

அமெரிக்காவின் கலிபோர்னியா, சாக்ரமெண்டோவில் உள்ள இந்து கோயிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் இந்துக்கள் திரும்பிச் செல்லுங்கள் என்ற வாசகத்தையும் எழுதி வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெல்வில்லில் பிஏபிஎஸ் ஸ்ரீ நாராயண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் கடந்த செப்.17ம் தேதி மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: புணேவில் கொட்டித்தீர்க்கும் கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் அதே கோயிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து சேதப்படுத்தியுள்ளனர். இந்துக்களே திரும்பிச் செல்லுங்கள் என்ற வாசகத்தையும் எழுதி வைத்துச் சென்றுள்ளனர். இதற்கு பிஏபிஎஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிஏபிஎஸ் அமைப்பு வெளியிட்ட பதிவு

இதுதொடர்பாக பிஏபிஎஸ் அமைப்பு வெளியிட்ட எகஸ் பதிவில்,

சாக்ரமெண்டோவில் உள்ள ஸ்ரீ நாராயண சுவாமி கோயில் பெரிய சமூகத்தை ஆதரிப்பதற்காக எண்ணற்ற செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் ஈடுபட்டுள்ள இந்து கோயிலாகும்.

இதையும் படிக்க: முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன்: சித்தராமையா

நாராயணன் கோயிலை மர்ம நபர்கள் இடித்துச் சேதப்படுத்தியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வன்ம உணர்வுடன் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக அமைதி மற்றும் ஒற்றுமைக்காகக் கோயில் அமைப்பினர் பிரார்த்தனை செய்வதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் இந்து சமூகத்திற்கு எதிராகக் கோயிலை சேதப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு மாதத்திற்குள் நடைபெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க:சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறை!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமி பெரா வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

சாக்ரமென்டோவில் மத வெறிக்கும் வெறுப்புக்கும் இடமில்லை. எங்கள் சமூகத்தில் இந்த செயலை வண்மையாகக் கண்டிக்கிறேன். நம்பிக்கை, மரியாதைக்காக நாம அனைவரும் ஒன்றிணைவோம் என்றார்.

இந்து அமெரிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சி பயங்கரமானது மற்றும் தார்மீக ரீதியாகத் தவறானது. இந்த குற்றங்களை நீதித்துறை விசாரிக்க வேண்டும், மேலும் பொறுப்பானவர்கள் சட்டத்தின் கீழ் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ரோ கன்னா எக்ஸில் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024