Tuesday, October 22, 2024

அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதல்: 4 பேர் பலி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

அமெரிக்காவில் ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதியலில் 4 பேர் பலியானார்கள்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் உள்ள ரேடியோ டவர் மீது தனியாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதியது.

மோதிய வேகத்தில் அந்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியது.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜான் விட்மயர் உறுதிப்படுத்தினார்.

தீவிர புயலாக கரையைக் கடக்கும் ‘டானா’: வானிலை மையம்

இதுகுறித்து அவர் கூறுகையில், இன்றிரவு இது ஒரு சோகமான நிகழ்வு. இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும். இருப்பினும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது என்று தெரிவித்தார்.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

தற்போது ரேடியோ டவர் மீது ஹெலிகாப்டர் மோதும் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024