அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கையெழுத்திட்ட கமலா ஹாரிஸ்!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset
RajTamil Network

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கையெழுத்திட்ட கமலா ஹாரிஸ்!அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படிவங்களில் கமலா ஹாரிஸ் சனிக்கிழமை கையெழுத்திட்டார்,

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா அதிகாரபூர்வமாக ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படிவங்களில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சனிக்கிழமை (ஜூலை 27) கையெழுத்திட்டார், மேலும் நவம்பரில் தனது மக்கள் இயக்கம் பிரசாரம் வெற்றி பெறும் என்றும், ஒவ்வொரு வாக்குகளையும் பெற கடுமையாக உழைப்பேன் என்று அவர் கூறினார்.

இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படிவங்களில் இன்று கையெழுத்திட்டுள்ளேன். ஒவ்வொரு வாக்குகளையும் பெற கடுமையாக உழைப்பேன். நவம்பரில் எங்கள் மக்கள் இயக்கம் பிரசாரம் வெற்றி பெறும்" என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா்களுக்கு புதன்கிழமை அதிபர் ஜோ பைடன் ஆற்றிய தொலைக்காட்சி உரையில், ‘அமெரிக்கா்கள் ஜனநாயகத்தை அரவணைத்து வெறுப்புணா்வை தவிா்க்க வேண்டும். வேறு எந்தவொரு பணியையும்விட ஜனநாயகத்தை காப்பதே தலையாய பணியாகும்.

அடுத்த தலைமுறையிடம் சுடரை ஒப்படைத்து வழிவிடவே நான் அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து விலகினேன். இதுவே பிளவுபட்டுள்ள அமெரிக்காவை ஒன்றிணைக்க சிறந்த வழி. தற்போது இளையோரின் குரல்கள் ஒலிக்க வேண்டிய நேரமும், இடமும் வந்துள்ளது’ என்றாா்.

தனக்குப் பதிலாக ஜனநாயக கட்சி வேட்பாளராக அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் போட்டியிட ஏற்கெனவே பைடன் ஆதரவு தெரிவித்தாா். இந்நிலையில், அதிபராக பதவி வகிக்க அனுபவமிக்க, வலிமையான திறமையான கமலா ஹாரிஸ் தகுதியானவா் என்றும், நம் நாட்டிற்கான ஒரு சிறந்த தலைவர். அவர் அதிபராக தேர்வு செய்ய வேண்டியது மக்களாகிய நீங்கள்தான் என தனது உரையில் பைடன் குறிப்பிட்டாா்.

மேலும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை விட ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தகுதியானவர்கள் யாரும் இல்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஜோ பைடன் சமீபத்தில் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிய பின்னர், அமெரிக்க அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸூக்கு பகிரங்கமாக ஒப்புதல் அளித்துள்ளார்.

நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஹாரிஸ் வெற்றி பெறுவதை உறுதி செய்ய தானும் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று ஒபாமா கூறினார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில், "இந்த வார தொடக்கத்தில், மிச்செலும் நானும் எங்கள் நண்பர் கமலா ஹாரிஸை அழைத்தோம். நாங்கள் அவரிடம், அவர் அமெரிக்காவின் ஒரு சிறந்த அதிபராக வருவார், மேலும் அவருக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது. எங்கள் நாட்டிற்கான இந்த முக்கியமான தருணத்தில், நவம்பரில் அவர் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று அவரிடம் கூறினோம். நீங்களும் எங்களுடன் இணைந்து அவருக்கு ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மிச்செல் ஒபாமா தன்னுடைய எக்ஸ் பக்க பதிவில், “கமலாவை நினைத்து நான் பெருமை அடைகிறேன். நானும், பாரக்கும் அவரை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஆதரிப்பதில் மிகவும் உற்சாகமாக உள்ளோம். அவரின் நேர்மறை சிந்தனை, நகைச்சுவை உணர்வு ஆகியவை நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் என்று நம்புகிறோம். மேலும், உங்கள் ஆதரவையும் நாங்கள் பெற்றுள்ளோம் கமலா ஹாரிஸ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக,புதன்கிழமை நடிகரும் பிரபல ஜனநாயகக் கட்சி நிதி திரட்டுபவருமான ஜார்ஜ் குளூனி அமெரிக்க அதிபர் பதவிக்கு ஹாரிஸை பகிரங்கமாக ஆதரித்தார்.

You may also like

© RajTamil Network – 2024