அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து 471 நாட்கள் கழித்து நேற்று செந்தில் பாலாஜி வெளியே வந்தார்.

புழல் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று செந்தில் பாலாஜி மரியாதை செலுத்தினார். இன்று காலை சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, சுப்ரீம் கோர்ட்டு பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் @V_Senthilbalaji அவர்களுக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி… pic.twitter.com/ECOoTjumuZ

— Udhay (@Udhaystalin) September 27, 2024

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்