அம்பானி வீட்டு திருமண விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்ற ரஜினிகாந்த்!

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

ரஜினிகாந்த் முதல் அட்லி வரை… அம்பானி வீட்டு திருமண விழாவில் பங்கேற்ற தமிழ் திரையுலக பிரபலங்கள்அம்பானி வீட்டு திருமண விழா

அம்பானி வீட்டு திருமண விழா

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த தனது குடும்பத்துடன் பங்கேற்றுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவன குழு தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் இன்றிரவு திருமணம் நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்பானியின் இல்லமான ஆண்டிலியாவில் திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. திருமண விழாவுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக மணமகன் வீட்டரை புறப்பட்டனர்.

விளம்பரம்

முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதியர் தங்களது மகன் ஆகாஷ் அம்பானி, மருமகள் ஷ்லோகா மேத்தா, மகள் இஷா அம்பானி, மருமகன் ஆனந்த் பிரமல் மற்றும் மணமகன் அனந்த் அம்பானியுடன் விழாவுக்கு வருகை தந்தனர். மணமகன் அனந்த் அம்பானி தங்க நிறத்திலான ஷெர்வானியில் கலக்கலாக காட்சியளித்தார். இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடியோ-விசுவல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் திரை பிரபலங்கள் கிம் கர்தாஷியன், ஜாக்கி ஷெராஃப், ராஜ்குமார் ராவ், கியாரா அலி கான், அனன்யா பாண்டே, அர்ஜுன் கபூர், குஷி கபூர் என ஏராளமான பிரபலங்கள் வருகை புரிந்துள்ளனர்.

தமிழ் திரைப்பிரபலங்கள்

நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, இளைய மகள் சௌந்தர்யா, அவரது கணவர் மற்றும் அவரது மகன் உள்பட குடும்பத்துடன் பங்கேற்றுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் அட்லீ, அவரது மனைவி பிரியா உள்ளிட்ட தமிழ் திரைப்பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இதே போன்று, கேஜிஎப் படத்தின் கதாநாயகன் யஷ், மல்யுத்த வீரர் ஜான் சீனா, பிகார் முன்னாள் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உள்ளிட்டோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

முன்னதாக மல்யுத்த வீரர் ஜான் சினா திருமண விழாவுக்கு ஷெர்வானியில் வந்திறங்கி அசத்தினார். விழாவில் பிரபலங்கள் இந்திய பாரம்பரிய ஆடைகள் அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

You may also like

© RajTamil Network – 2024