அம்மாவுக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது அம்மாவுக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ். விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய விக்னேஷ் சிவன் அவ்வபோது தனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது தனது அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அழகிய புகைப்படங்களுடன் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது "ஒவ்வொரு முறையும் நான் என் குழந்தைகளை பார்க்கும்போது நிரம்பி வழியும் அன்பின் அளவை விவரிக்க முடியாது. அதே நேரத்தில் காதல் எத்தனை வருடங்கள் கடந்தாலும் குறைந்து போவதில்லை . பெற்றோர்கள் நம்மை தினமும் அப்படித்தான் உணர்கிறார்கள். நாம் எவ்வளவு வளர்ந்தாலும் அந்த உணர்வு அப்படியே இருக்கும். அவர்கள் விரும்பியபடி அவர்களை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருப்பது மட்டும்தான் நம்முடைய குறிக்கோள். ஒவ்வொரு முறையும் நாம் அவர்களை மகிழ்ச்சியாக சிறப்பாக உணர வைக்கும் போது வாழ்க்கை அழகாக இருக்கும். இனிய பிறந்தநாள் குமாரி அம்மா . நீ இல்லாமல் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். லவ் யூ அம்மா, பல வருடங்கள் உங்கள் பிறந்தநாளை இதே சிரிப்புடன் அமைதியுடன் கொண்டாட வேண்டும்" என்று பதிவிட்டிருக்கின்றார்.

விக்னேஷ் சிவன், பிரதிப் ரங்கநாதனை வைத்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Original Article

You may also like

© RajTamil Network – 2024