அயனாவரத்தைப் பிரித்து கொளத்தூர் தாலுகா உருவாக்கம்

by rajtamil
Published: Updated: 0 comment 6 views
A+A-
Reset

சென்னை மத்திய வருவாய்க் கோட்டத்தில் உள்ள அயனாவரம் தாலுகாவை இரண்டாகப் பிரித்து புதிய வட்டமாக கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, புதிய கொளத்தூர் தாலுகாவை தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அயனாவரம் வட்டத்தில் சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள், வருவாய் ஆவணங்கள், சமூகம், வருமானம் மற்றும் சட்ட வாரிசுக்கான பல்வேறு சான்றிதழ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை, அப்பகுதி குடியிருப்பாளர்கள் எளிதாக அணுகுவதற்காக அயனாவரம் தாலுகாவை இரண்டாகப் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.கே.எம். காலனியில் உள்ள தாலுகா அலுவலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார். புதிய கொளத்தூர் வட்டத்துடன், சென்னை இப்போது 17 வட்டங்களைக் கொண்டுள்ளது. தற்போது அயனாவரத்தின் பரப்பளவு 9.06 சதுர கிலோமீட்டராகவும், கொளத்தூர் 6.24 சதுர கிலோமீட்டராகவும் உள்ளது.

போராட்டம் தொடரும்! மமதா கோரிக்கையை ஏற்க மருத்துவர்கள் மறுப்பு!

அயனாவரம் வட்டத்தில் உள்ள 8 வருவாய் கிராமங்களில் 5 கிராமங்களை அயனாவரம் வட்டத்திலேயே தொடர்ந்து இருத்தி வைத்து, மீதமுள்ள 3 வருவாய் கிராமங்களில் கொளத்தூர் கிராமத்தை கொண்டு கொளத்தூர் குறுவட்டம், சிறுவள்ளூர், பெரவள்ளூர் ஆகிய 2 வருவாய் கிராமங்களை கொண்டு பெரவள்ளூர் குறுவட்டத்தையும் உள்ளடக்கி கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம்.

6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூரில் 3,78,168 பொதுமக்கள் வசிக்கின்றனர். கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் ஆகிய 3 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய கொளத்தூர் வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது.

மேலும், இந்த வருவாய் வட்டத்துக்கு தேவைப்படும் 42 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது. புதிய வருவாய் வட்டத்துக்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவுக்கு ரூ.2.91 கோடியும், தொடரா செலவினம், ரூ.32.22 லட்சமும் ஒதுக்கி உத்தரவிடப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டாலின் பிரதிநிதித்துவப்படுத்தும் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின்கீழ் வரும்; அதேபோல் வடக்கு சென்னை மக்களவைத் தொகுதியின் கீழ் வரும்.

You may also like

© RajTamil Network – 2024