அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்கா!

by rajtamil
Published: Updated: 0 comment 5 views
A+A-
Reset

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் அபு தாபியில் நடைபெற்று வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஷேக் சையது மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் பேட் செய்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!

171 ரன்கள் குவிப்பு

அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கர்ட்டிஸ் காம்ஃபர் 49 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, நீல் ராக் 37 ரன்களும், டாக்ரெல் 21 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் பாட்ரிக் க்ரூகர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வியான் முல்டர், ஓட்நில் பார்ட்மேன், ஜோர்ன் ஃபார்ச்சுனின் மற்றும் பீட்டர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

அபார வெற்றி

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ரியான் ரிக்கல்டான் 76 ரன்களும் (48 பந்துகள், 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள்), ரீஸா ஹென்ரிக்ஸ் 51 ரன்களும் (33 பந்துகள், 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியமைக்காக ரியான் ரிக்கல்டானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சாலை விபத்தில் சிக்கிய இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024