Sunday, September 22, 2024

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 210 ரன்களில் ஆல் அவுட்

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிரின்ஸ் மஸ்வாரே 74 ரன்கள் குவித்தார்.

பெல்பாஸ்ட்,

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரின்ஸ் மஸ்வாரே மற்றும் ஜாய்லார்ட் கும்பி இணை வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஜாய்லார்ட் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மையர்ஸ் 10 ரன்களிலும், கேப்டன் கிரெய்க் எர்வின் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் மஸ்வாரே உடன் கை கோர்த்த சீன் வில்லியம்ஸ் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு ரன்களை சேர்த்தனர். மஸ்வாரே 79 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சீன் வில்லியம்ஸ் தனது பங்குக்கு 35 ரன்கள் அடித்தார். முடிவில் 71.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 210 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதோடு முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிரின்ஸ் மஸ்வாரே 74 ரன்கள் அடித்தார். அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பாரி மெக்கார்த்தி மற்றும் ஆண்டி மெக்பிரைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024