அயோத்தி: புனித நகரமான அயோத்தியை போன்று காசி, மதுராவும் ஜொலிக்க வேண்டும் என உத்தரப்பிரசேச மாநில முதல்வர் யோகி அதித்யநாத் கூறினார். மேலும், "இரட்டை இயந்திரம் கொண்ட அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது" என்பதற்கு அயோத்தியே சாட்சி என்று கூறினார்.
தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியில் வியாழக்கிழமை 25 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 500 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் ராமர் அவரது இல்லத்தில் இருக்கிறார். 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் தற்போது தீபாவளிக்கு அயோத்தியில் வசிப்பதால் இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாகும். இது ஆரம்பம் மட்டுமே, இந்த ஆரம்பம் அதன் தர்க்கரீதியான முடிவை எட்ட வேண்டும். எனவே, நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-க்குள் காசி மற்றும் மதுராவும் அயோத்தியைப் போல ஜொலிக்க வேண்டும். ராமர் கோவில் கட்டும் வாக்குறுதியை
நிறைவேற்றி உள்ள இரட்டை இயந்திர அரசு, இப்போது அயோத்தி தன்னை நிரூபிக்கும் முறை வந்துள்ளதை நினைவில்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க |சாலை விபத்தில் பலியான பெண் எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி!
மா சீதையின் இந்த 'அக்னிபரிட்சை மீண்டும் நிகழக்கூடாது. நாம் இதிலிருந்து வெளியே வர வேண்டும். இதற்கு அயோத்தி மக்கள் மீண்டும் ஒருமுறை முன்வர வேண்டும். இதனால்தான் இந்த பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு நாங்கள் இன்று வந்திருக்கிறோம். "மாஃபியாக்களைப் போலவே, இந்த தடைகளும் அகற்றப்படும்," என்று அவர் கூறினார்.
ராம ஜென்மபூமி இயக்கத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அனைத்து ஆன்மாக்களையும் நினைவுகூரும் இந்த தருணத்தில் அவர்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன். அயோத்தி மண்ணில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற அவர்களது ஆசை, சபதம் நிறைவேறியுள்ளது. அயோத்திக்கு மீண்டும் ராமர் திரும்பி வந்துள்ளார் என்றார்.
மேலும் சுமார் 3,50,000 பேர் இந்த உலகத்தை விட்டு வெளியேறும்போது ஒரே ஆசையுடன் தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள். அவர்களின் விலைமதிப்பற்ற தியாகத்தின் காரணமாக, அயோத்தி மண்ணில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற அவர்களது சபதம், ஆசை நிறைவேறியது. அயோதிக்கு மீண்டும் ராமர் திரும்பி வந்துள்ளார்.
அயோத்தியை உலகின் மிக அழகான நகரங்களில் ஒன்றாக மாற்ற அரசு உறுதியாக உள்ளது என யோகி அதித்யநாத் கூறினார்.